டெல்லி வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் தான் 2.5 வருடமாக வன்புணர்வு செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னுடன் பணிபுரியும் உயர் அதிகாரிகள் தன்னை மிரட்டி இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த செயலை வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர். அதே வீடியோவை வைத்து தற்போது தன்னை மிரட்டி வருவதாகவும் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது அவரின் வாக்குமூலம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்து இருக்கிறது. அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்து இது கேள்வி எழுப்பி இருக்கிறது.
டெல்லி வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் மரணம் அடைந்த காரணத்தால் அவரது மனைவிக்கு 2014ம் ஆண்டு வேலை கொடுக்கப்பட்டது. மத்திய அரசுக்கு சொந்தமான ஆணையத்தில் அந்த பெண் பணிக்கு சேர்ந்ததில் இருந்து பல வகையில் துன்பங்களை அனுபவித்து இருக்கிறார். அவரது உயர் அதிகாரிகள் சிறிய அளவில் பாலியல் தொல்லைகள் கொடுத்து இருக்கிறார்கள்.