குமரியை புரட்டிப்போட்ட மழை..தாண்டவம் ஆடிய ஓகி ..தென்கோடியில் என்ன நடக்கிறது?- வீடியோ

2017-12-01 6

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டப்பகுதிகளில் நேற்று காலையில் இருந்து பெய்து வரும் மழை மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஓகி புயல் ஏற்படுத்திய கொடுங்காற்று மொத்த மாவட்டத்தையே புரட்டி போட்டு இருக்கிறது. நாகர்கோவில் தொடங்கி மார்த்தாண்டம் வரை அனைத்து பகுதிகளும் கடந்த 30 மணி நேரமாக தமிழ்நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் பல பகுதிகளுக்கு மின்சாரமும், உணவுப் பொருட்களும் கிடைக்கவில்லை.
ஓகி புயல் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இன்னும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. ஏற்கனவே அந்த மாவட்டத்தில் சில முக்கியமான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் ஓகி புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரியாக நேற்று காலையில் இருந்து ஓகி புயல் கொஞ்சம் கொஞ்சமாக குமரி மாவட்டத்தை தாக்க தொடங்கி இருந்தது. 11 மணி அளவிற்கு அங்கு காற்றின் வேகம் மிகவும் அதிகமானது. முதலில் 170 கிமீ தொலைவில் இருந்த புயல் குமரிக்கு தெற்கே 60கிமீ வரை வந்தது. புயல் இவ்வளவு அருகில் மையம் கொண்டு இருந்ததால் கேரளா எல்லை தொடங்கி நாகர்கோவிலுக்கு வெளியே வள்ளியூர்வரை கொடூரமான காற்று அடித்தது.

Kanyakumari has completely affected by cyclone Ockhi. Most of the places got cut off from other places. No electricity, no cellphone signal in south Tamilnadu including Nagarcoil, government and youngsters help needed.

Videos similaires