குற்றாலம் அருவியில் பயங்கர சத்தத்துடன் கொட்டும் வெள்ளம்... பயணிகள் குளிக்கத் தடை!- வீடியோ

2017-11-30 2,792

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓகி புயல் உருவாகியுள்ளதன் எதிரொலியாக தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி,கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும்விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போதே அதிக அளவில் காற்று வீசி வருவதாக மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இரவு முதல் மழையுடன், காற்றும் வீசி வருவதாக மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கன்னியாகுமரி விரைந்துள்ளனர்.

குமரி மாவட்டம் போல நெல்லை மாவட்டத்திலும் தென்காசி, செங்கோட், குற்றாலம், வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது.
இதனால் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்டவற்றில் வெள்ள நீரி பெருக்கெடுத்து ஓடுகிறது. அருவியின் மேல் இருந்து பயங்கர சத்தத்துடன் வெள்ள நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது, இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டள்ளது.

Kutralam falls flooded with rain waters and so tourists were not allowed to took bath in the falls, district collector requests tourists not to risk their life and be safe.

Videos similaires