ஓகி புயல் எல்லாம் சும்மா..அதுக்கு அடுத்து இன்னொன்னு இருக்கு.. வீடியோ

2017-11-30 13,879

இந்த வருட மழை காலத்தின் முதல் புயல் என்ற சிறப்பு பெயருடன் கன்னியாகுமரியை தாக்க தொடங்கி இருக்கிறது ஓகி புயல். தற்போது இந்த புயல் கன்னியாகுமரிக்கும், திருவனந்தபுரத்திற்கும் இடையில் இருக்கிறது. இதனால் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. கன்னியாகுமரியில் தற்போது 70 கிமீ வேகத்தில் மோசமாக காற்று வீசிக் கொண்டு இருக்கிறது. இந்த புயலை கொஞ்சம் எளிதாக சமாளித்துவிடாமல் என்றுதான் எல்லா வானிலை ஆய்வு மையங்களும் கணித்து இருக்கிறது. தற்போது இந்த ஓகி புயல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவாக்கிக் கொண்டே வருகிறது. இது அரபிக்கடலை நோக்கி சென்று தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தமிழ்நாட்டில் எங்குமே கரையை கடக்காது. எனவே இதை குறித்து அதிக அச்சப்பட தேவையில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஓகி புயல் சரியாக நாளை மதியம் தன் வீரியத்தை இழக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் அந்த புயல் முடிந்து இரண்டு நாள் இடைவெளியில் மூன்றாம் தேதி அடுத்த புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இதுதான் ஓகி புயலைவிட மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார்கள். சென்னையில் இரண்டு வாரத்திற்கு முன் மழை பெய்த போதே இந்த புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

First ever cyclone of this season 'Ockhi' has formed in Arabian sea. At the same time new cyclone has formed in the Andaman Island. It may cause heavy rain for few more days in Chennai and Coastal areas of Tamilnadu. It also will convert into storm.

Videos similaires