'மெர்சல்' நஷ்டம் எனக் கூறியவர்களுக்கு தயாரிப்பாளர் பதிலடி!- வீடியோ

2017-11-30 6,718

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் திரைக்கு வந்து பிரமாண்ட வெற்றியை பெற்றுவிட்டது. இப்படத்தின் மூலம் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் நல்ல லாபம் தான் கிடைத்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த மெர்சல் படம் 40 முதல் 60 கோடி வரை நஷ்டம் என சினிமாத் துறையை சேர்ந்த தயாரிப்பாளர், மற்ற பிரபலங்கள் பேட்டிகளில் கூறியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன் நஷ்டம் இல்லை எனக் கூறியுள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் விஜய் நடித்த 'மெர்சல்' படம் ரூ. 40 கோடி நஷ்டம் என்றார். ஒரு தயாரிப்பாளரே இப்படிக் கூறியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மெர்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 60 கோடி வரை நஷ்டம் என்று கூறியுள்ளார். இதுநாள் வரை எந்த ஒரு விநியோகஸ்தர்களும் மெர்சல் நஷ்டம் என்று கூறியது இல்லை. இது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன் "இது ஒரு திட்டமிட்ட பேச்சு போல உள்ளது. தயாரிப்பாளர் படம் நஷ்டம் என எதுவும் கூறவில்லை, நீங்களாகவே ஏதாவது கற்பனை செய்துகொண்டு லாஜிக் இல்லாமல் பேச வேண்டாம்." எனக் கூறினார்.


Some producers and other celebrities in cinema industry were shocked by the fact that 'Mersal' film was a loss of between 40 and 60 crores. Now, Producer Dhananjayan tweeted, "Mersal has earned the biggest share to all distributors, exhibitors, theatre owners, vendors & everyone involved. So, it can't be a loss to the Producer. Let the Producer declare the numbers."

Videos similaires