குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி தினமும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கேள்வி கேட்க உள்ளதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குஜராத்தின் தாசா பகுதியில் இன்று ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் இன்றைய கேள்வியை முன் வைத்தார்.
ராகுல் காந்தி கூறுகையில், 1995ம் ஆண்டு குஜராத்தின் மொத்த கடன் தொகை ரூ.9.183 கோடியாக இருந்தது. 2017ல் குஜராத் மொத்த கடன் தொகை ரூ.2,41,000 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதாவது, ஒவ்வொரு குஜராத் மாநில மக்களின் தலை மீதும் தலா ரூ.37,000 கடன் உள்ளது. தவறான பொருளாதார நிர்வாகத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் குஜராத் மக்கள் எதற்காக துன்பம் அனுபவிக்க வேண்டும்? இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
விவசாயிகள் கடன் அவதியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். அதுவும் 20,000 அல்லது 50,000 கடனுக்காக விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். ஆனால் மல்லையா 9000 கோடி கடன் வைத்துள்ளார். அவர் தற்கொலை செய்யவில்லை. லண்டனில் வாழ்க்கையை எஞ்சாய் செய்கிறார்.
Rahul promised to ask one question every day in the run up to the polls. His today's question about Gujarat debt.