ஷூட்டிங்ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன், சூரி: வைரலான வீடியோ

2017-11-30 10,512

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன், சூரி கிரிக்கெட் விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது. அந்த பட வேலைகள் முடிந்ததை அடுத்து சிவா அடுத்த படத்தில் பிசியாகிவிட்டார்.

பொன். ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை 24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தில் சிம்ரன், நெப்போலியன் ஆகியோரும் உள்ளனர். படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன், சூரி மற்றவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அவர்கள் கிரிக்கெட் விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Sivakarthikeyan and Soori played cricket in the shooitngspot of Ponram's film. A video showing them playing cricket has gone viral on social media. Samantha is the leading lady in this movie.

Videos similaires