அடல்ட் கூட்டணியில் இணைந்த ஆர்யா

2017-11-30 2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா அடுத்ததாக அடல்ட் படங்களை மட்டுமே இயக்கி வரும் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமாருடன் இணையிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஆர்யா தற்போது `ராஜரதா' என்ற கன்னட படத்திலும், அமீர் இயக்கத்தில் `சந்தனத் தேவன்' படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா' பிரமாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், ஆர்யாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி ஆர்யா அடுத்தாக ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கஜினிகாந்த் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை `ஹரஹர மகாதேவகி', `இருட்டு அறையில் முரட்டு குத்து' படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குகிறார்.
இந்த படத்தில் ஆர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பாலமுரளி பாலு இசையமைக்கிறார். பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சந்தோஷ் பி.ஜெயக்குமார் தற்போது கவுதம் கார்த்திக்கை வைத்து `இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தை முடித்த பிறகு ஆர்யாவை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/11/29122238/1131622/Arya-to-teams-up-with-Adult-team.vpf