தென் தமிழகத்தை மிரட்டும் ஓகி புயல்...12 மணிநேரத்தில் வருகிறது- வீடியோ

2017-11-30 2,297

கன்னியாகுமரி அருகி ஓகி புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. குமரிக்கு தென்கிழக்கே 170கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. 12 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்தப் புயல் காரணமாக மணிக்கு 167 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும். இது மிகத் தீவிர புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக அடுத்த 36 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் மிக கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடிக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடிக்கிறது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

India Met Department (IMD) has issued a tropical cyclone formation alert to the West of Sri Lanka and to the South of Kanyakumari at the tip of peninsular India.

Videos similaires