மண்ணடியில் பிரபல ரவுடி விஜி பட்டப்பகலில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி விஜி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கொலை முயற்சி வழக்கில் ரவுடி விஜி ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் ஆஜராகியுள்ளார். இதைத்தொடர்ந்து இன்று மாலை அவர் பவளக்காரத் தெருவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் விரட்டியது. அவர்களிடமிருந்து தப்பியோட முயன்ற ரவுடி விஜி வீடு ஒன்றில் புகுந்தார். அப்போதும் அவரை விடாமல் விரட்டிச்சென்ற அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் ரவுடி விஜி.
இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். மர்ம கும்பல் விஜியை விரட்டுவது வெட்டுவது மற்றும் வெட்டிவிட்டு தப்பியோடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A rowdy named Viji in Chennai murdered today by unknown persons. Stangers killed him near manndi. Police searching by the CCTV footage.