1989-ல் தமிழக சட்டசபையில் வரலாறு காணாத வன்முறைக்கு வித்திட்ட ‘சோபன் பாபு’!- வீடியோ

2017-11-30 27

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது; அக்குழந்தையின் தந்தை தெலுங்கு நடிகர் சோபன் பாபு என ஆண்டாண்டு காலமாக பேசப்பட்டு வரும் செய்தியை ஜெயலலிதாவின் உறவினர்களே தற்போது பகிரங்கப்படுத்தி உறுதி செய்து வருகின்றனர். இதே சோபன் பாபுவால்தான் தமிழக சட்டசபை வரலாறு காணாத வன்முறையை சந்தித்தது என்பதும் சரித்திரம். எம்ஜிஆரின் திரைப்படங்களில் ஆஸ்தான நாயகியாக வலம் வந்த ஜெயலலிதா மாற்றப்படுகிறார். 1970களின் தொடக்கங்களில் மஞ்சுளா, லதா என ஹீரோயின்கள் எம்ஜிஆர் படங்களில் இடம்பிடிக்கிறார்கள்.

அப்போது ஜெயலலிதாவின் திரை உலக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பேசப்படுகிறது. 1973-ல் தெலுங்கு படங்களில் தலைகாட்டுகிறார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கும் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது; ஜெயலலிதா ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார் என சேதிகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.
இந்த நிலையில் 1978-ல் தமிழகத்தில் ஜெயலலிதா புயல் மீண்டும் வீசுகிறது. குமுதம் வார இதழில் ஜெயலலிதா எழுதிய தொடரும் அவர் கொடுத்த விளம்பரமும் பெரும் பரபரப்பை கிளப்பின. அதில்தான் தானும் நடிகர் சோபன் பாபுவும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவதாகவும் சோபன் பாபுவுக்கு திருமணமாகி இருப்பதால் தனி வீட்டில் ஒன்றாக இருப்பதாகவும் ‘கோயிங் ஸ்டெடி' எனவும் பகிரங்க பேட்டி கொடுத்தார் ஜெயலலிதா.

Here the flash back Story on Jayalalithaa- Sobhan Babu. In 1989 ugly episode in Tamilnadu assembly for Former Chief Minsiter Karunanidhi's Sobhan Babu comments against Jayalalithaa

Videos similaires