ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த பெண் குழந்தை நானே என பெங்களூரு அம்ருதா நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருக்கிறார். ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதாவும், ஆம் சோபன் பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பெண் குழந்தை பிறந்தது; 1980-ல் ஜெயலலிதாவுக்கு பிரசவம் பார்க்கும் போது நான் உடனிருந்தேன் என அதிர குண்டை வீசியுள்ளார். அம்ருதா யார் என்பது பிறகு இருக்கட்டும். ஆனால் ஜெயலலிதா, சோபன்பாபு உறவு என்பது உலகம் அறிந்ததுதான். புதிதாக அதில் ஏதும் இல்லை.
ஜெயலலிதாவுக்கும் சோபன் பாபுவுக்கும் இடையேயான உறவு என்பதை முதலில் உறுதி செய்வதாக சுட்டிக்காட்டப்படுவது 1978-ம் ஆண்டு குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதாவின் "மனம் திறந்து பேசுகிறேன்" என்கிற தொடர்தான்.
அத்தொடரில்தான் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவும் தாமும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவது குறித்தும் சோபன்பாபுவுக்கு பால்கனியில் நின்று ஜெயலலிதா டாட்டா காண்பிக்கும் படங்களும் வெளியாகி இருந்தன என குறிப்பிடப்படுவது உண்டு
Late TamilNadu Chief Minister Jayalalithaa herself confessed to being in love with Actor Sobhan Babu at Kumudam weekly magaizne in 1978.