எனக்கு அப்போது 16 வயது... அப்போது நான் வழக்கமாக பள்ளிக்கு பேருந்து விட்டு இறங்கி நடந்து தான் செல்வேன்! நான் நடந்து செல்லும் போது ரோட்டில் நின்று கொண்டு ஒருவன் தினமும் என்னை பார்த்துக் கொண்டிருப்பான்.. முதல் நாள் என்னை அவன் பார்க்கும் போது எதற்காக பார்க்கிறான் என்றே தெரியவில்லை.. ஒருவேளை நம்ம அண்ணாவின் பிரண்டாக இருப்பானோ என்று நினைத்து அவனை பார்த்து சிரித்து விட்டு சென்றேன்... ஆனால் தினமும் அவன் அதே இடத்தில் நின்று கொண்டு என்னை பார்த்துக் கொண்டிருந்தான்.. எனக்கு அவன் எதற்காக என்னை பார்க்கிறான் என்பது துளியும் புரியவில்லை.. வழக்கமாக பேருந்தில் வரும் நான்.. அன்று மட்டும் என் அண்ணாவுடன் வண்டியில் வந்தேன்.. அப்போதும் அவன் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தான். என் அண்ணாவிடம் சிவா அவன் உன் பிரண்ட் மாதிரி இருக்கான் பாரு என்று கூறினேன்... அவன் பார்த்து விட்டு இல்லை.. எனக்கு தெரியாது என்று கூறிவிட்டான்.. எனக்கு அப்போது தான் அவன் என்னை சைட் அடிக்கிறான் என்பதே புரிந்தது...! அந்த வயதில் ஒருவர் என்னை சைட் அடிப்பது என்பது எனக்கு ஒரு பெருமையான விஷயமாக இருந்தது.. அன்று முதல் நான் கொஞ்ச நேரம் அதிகமாக குளியல் அறையிலும், கண்ணாடி முன்னும் செலவிட ஆரம்பித்தேன்... நான் பார்க்க அவ்வளவு அழகானவள் எல்லாம் இல்லை.. ஆனால் அழகு என்ற கர்வம் எனக்குள்ளும் இருக்கிறது...!
My story : I married him during my school days but he cheated me