பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ஜூலிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து செவிலியர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் மற்றொரு பிரிவினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் தமிழிசை, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Bigg Boss Julie has gone to DMS campus to participate in Nurse protest. But the Police not allowed her to protest.