ராணுவ வீரர்கள் இந்த ஆப்ஸ் யூஸ் பண்ண கூடாது.. என்ன காரணம் தெரியுமா?- வீடியோ

2017-11-29 2,851

சில முக்கியமான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பயன்படுத்த கூடாது என சீன எல்லையில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக அந்த அப்ளிகேஷன்களை டெலிட் செய்யும்படியும் ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அப்ளிகேஷனைகளை டெலிட் செய்ய சொன்னதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு உள்ளது. இதில் அனைத்தும் சீனாவின் தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இந்திய பாதுகாப்புத்துறை கூறியிருக்கும் விளக்கம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.

சீனா எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் இனி சில முக்கியமான அப்ளிகேஷன்களை பயன்படுத்த முடியாது. அதேபோல் சில கம்பெனி மாடல மொபைல் போன்களையும், மொபைல் உபகாரணங்களையும் பயன்படுத்த முடியாது. மொத்தமாக 40 விதமான ஆப்ஸ்களுக்கு பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது. இவை அனைத்தும் சீனாவில் உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன்கள் ஆகும்.

இந்த ஆப்ஸ்கள் அனைத்தும் சீனாவில் தங்களது சர்வர்களை வைத்து இருக்கிறது. மிகப்பெரிய ஆப்ஸ்கள் கூட சீனாவில் தங்களது மெயின் சர்வர்களை வைத்து இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக சீன எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு அந்த ஆப்களை டெலிட் செய்யும்படி உத்தரவு சென்றுள்ளது. இதன் மூலம் சீன ராணுவம் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

The Indian Government has banned 40 China based apps in Indian military. It also directed the troops to delete those 40 Android apps from their phone.

Videos similaires