ஜூலி நடிகர் விமலுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், ரைசா, ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராம், ஓவியா ஆகியோருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறது.
ஹரிஷ் கல்யாணும், ரைசாவும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஜூலிக்கு மட்டும் பட வாய்ப்புகள் வரவில்லை. அதனால் அவர் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்று கூறப்பட்டது. ஜூலி நடிகர் விமலுடன் மணக்கோலத்தில் நிற்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதன் மூலம் ஜூலி விமல் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றவர்கள் தங்களுக்கு பட வாய்ப்பு கிடைப்பதை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ஜூலி தான் நடிக்கும் படம் பற்றி வாய் திறக்கவே இல்லை. சினிமா படங்களில் நடிக்க ஜூலி ஆசைப்படுகிறார். ஆனால் அவரின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் ஜூலி பெற்றோருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.
A picture of former Bigg Boss contestant Julie with actor Vimal is doing rounds on social media. Buzz is that Julie is making her debut in Kollywood with Vimal. Netizens couldn't believe their eyes after seeing the viral picture.