அமைச்சர் விஜயபாஸ்கருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் இரண்டாவது நாளாக இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் செவிலியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் செவிலியர்கள் தரப்பில் இருந்து 20 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது.
Nurses talks with minister Vijayabaskar at secreteriate. Nurses are protesting from yesterday urging govt to implement their demands.