ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கினார் பிரதமர் மோடி- வீடியோ

2017-11-28 3,811

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முதல் கட்டமாக 30 கி.மீ. தூரம் கொண்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியா, அமெரிக்கா இணைந்து உலக தொழில்முனைவோர் மாநாட்டை ஹைதராபாத்தில் நடத்துகின்றன. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இன்று அதிகாலை ஹைதராபாத் வந்தடைந்தார். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார்.

இதற்காக பேகம்பேட்டை விமான நிலையத்துக்கு மோடி வந்தார். அங்கு அவருக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்பு அளித்தார். இதையடுத்து அங்கிருந்து மியாபூர் வந்த அவர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் மோடி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

மியாப்பூர் மற்றும் நாகோல் இடையே உள்ள 24 ரயில் நிலையங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை நாளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

Prime Minister Narendra Modi arrived here today on a day's visit during which he would inaugurate the first phase of the Hyderabad Metro Rail project and the Global Entrepreneurship Summit (GES).

Videos similaires