'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் காட்சிகள் நீக்கம் - மன்னிப்பு கேட்ட படக்குழு!- வீடியோ

2017-11-28 4

'சதுரங்க வேட்டை' இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. நல்ல விமர்சனங்களும், வாழ்த்துக்களும் தொடர்ந்து படக்குழுவிற்கு கிடைத்து வந்தது. இந்நிலையில் படக்குழு தற்போது மன்னிப்புக் கேட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இப்படத்தில் யாரையும் புண்படுத்தும் நோக்கில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனாலும் குற்றப்பரம்பரை என்னும் சொல்லுக்காக மன்னிப்பு கேட்பதோடு அதைப் படத்திலிருந்து நீக்கம் செய்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் குற்றம்பரம்பரை என ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மிகவும் இழிவாகக் காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், 'குற்றம்பரம்பரை' எனும் சொல்லைப் பயன்படுத்தும் காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளது 'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழு. இருப்பினும் மக்கள் மனது புண்படும்படி இருப்பதாகக் கருதுவதால் அதற்காக 'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழு சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதுடன் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனிவரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பு ஆகியவற்றிலிருந்து குற்றப் பரம்பரை எனும் சொல் மற்றும் புத்தக காட்சி நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


'Theeran Adhigaaram Ondru' directed by H.Vinoth, starring Karthi, Rakul Preet Singh was released last week . Good reviews and greetings were also received by the film crew. In this case, the Crew has issued a letter of apology. There is no mention of anybody to hurt anyone in this film. But we apologize for the 'Kutraparambarai' word and mentioned scenes to be removed from the film.

Videos similaires