சீனாவில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் மக்கள் கூட்டமாக இருந்த போது புலி ஒன்று தப்பித்து வெளியே சென்று இருக்கிறது. கூண்டுக்குள் இருந்த அந்த புலி சரியாக யாரும் கவனிக்காத நொடியில் கூண்டைவிட்டு வெளியே சென்று இருக்கிறது.
இந்த புலி வெளியே சென்றது மட்டும் இல்லாமல் உடனடியாக மக்களை தாக்கவும் தொடங்கி இருக்கிறது. இதனால் குழந்தைகளும் பெரியவர்களும் காயம் அடைந்து இருக்கின்றனர்.
தற்போது இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இருக்கிறது. அந்த புலியின் செயலும் அங்கு இருந்த மக்களின் செயலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.சீனாவில் 'லின்பஃன்' என்ற பகுதியில் தற்போது நிறைய விழாக்களும் கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகிறது. அங்கு இந்த வருடத்தில் மிகப்பெரிய அளவில் சர்க்காஸ் ஒன்று போடப்பட்டு இருக்கிறது. நேற்று இந்த சர்க்கஸுக்கு மக்கள் வந்த நேரம் பார்த்து கூண்டுக்குள் இருந்த புலி ஒன்று தப்பித்து இருக்கிறது. கூண்டுக்குள் இருந்த காவலாளியை ஏமாற்றி விட்டு கிடைத்த கேப்பில் வெளியே சென்று இருக்கிறது.வெளியே வந்த இந்த புலி உடனடியாக மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. மேலும் அங்கு இருந்த மக்கள் அனைவரையும் தாக்க தொடங்கியது. காவலாளிகள் அந்த புலியை எப்படி பிடிப்பது என்று தெரியாமல் முழித்து இருக்கின்றனர். மேலும் புலியின் பயிற்சியாளர் இல்லாத காரணத்தால் அந்த புலி யார் பேச்சையும் கேட்காமல் அனைவரையும் தாக்கி இருக்கிறது.
இந்த சம்பவம் காரணமாக இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இரண்டு பேரும் 10 வயது கூட நிரம்பாத பள்ளிக் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த இடத்திற்கு தாமதமாக வந்த புலியின் பயிற்சியாளர் அந்த புலியை பிடிக்க முயன்றார். முதலில் அவரின் பேச்சை கேட்காத புலி பின் அவரிடம் வந்து சரண் அடைந்தது.