அம்மா ஜெயலலிதா, சரி அப்பா யாரு?.. அம்ருத்தா சொன்ன பதில் என்ன தெரியுமா??- வீடியோ

2017-11-28 3

ஜெயலலிதாவின் மகள் தான்தான் என கூறிய அம்ருத்தாவிடம் அவரது தந்தை யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஜெயலலிதா பெற்றெடுத்த மகள் நான் தான் எனக்கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருத்தா. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு தாங்கள் தான் அவரின் உண்மையான வாரிசு என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகனான தீபாவும் தீபக்கும் உரிமைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அம்ருத்தா என்பவர் நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு இதை நிரூபிக்க ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதாவுக்கு தங்களின் குடும்ப முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் அதனை நிராகரித்த சுப்ரீம்கோர்ட் மனுதாரர் ஹைகோர்ட்டை அணுகுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து டெல்லியில் இருந்தபடியே தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வரும் அவர் மேலும் பல கூடுதல் தகவல்களை கூறி பரபரப்பை கூட்டியுள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தான் ஜெயலலிதாவுக்கு பிறந்த குழந்தை என்பது துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு தெரியும் என்று கூறினார். ஓபிஎஸ் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்ததால் அம்ருத்தாவின் இந்த பதில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனது வளர்ப்பு தந்தையான பார்த்தசாரதி இறக்கும் போதுதான் தன்னிடம் ஜெயலலிதாவின் மகள் என்ற உண்மையை கூறியதாக கூறினார். இதைத்தொடர்ந்து உங்களின் தாய் ஜெயலலிதா என்று கூறிய வளர்ப்பு தந்தை, யார் உங்களின் தந்தை என்று கூறவில்லையா? உங்களின் தந்தை யார் என்று கேட்டார் செய்தியாளர்.

Do you know Amrutha's answer to the question of who your father is? Amrutha replied No comments about her fatther. Amrutha says she is the heir of Jayalalitha.

Videos similaires