மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை கொண்டாடுவது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு...
திருப்பூரில் இரண்டாக பிளவு பட்ட அதிமுக ஒன்றினைந்த பின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் இணைந்து மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பல்லடம் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த சண்முகம் பேசும்போது இரு அணிகள் இணைந்த பின்னும் பதவியில் உள்ள ஒருசிலர் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை தெரிவித்து வருவதாக கூறினார். அப்போது அதிமுக மாவட்ட செயலாளர் ஆனந்தன் குறுக்கிட்டு நன்றியுறையுடன் பேச்சை முடிக்கும் படி கூறியுள்ளார். இதனால் இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளும் நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.