தமிழத்தில் பேட்டரியில் இயங்க கூடிய பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கரூரில் போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்துகளை ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் பயணிகளின் பாதுகாப்பை கருதி நவீன வசதிகளுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் குளிர்சாதன வசதி படுக்கை வசதி கொண்ட புதிய பேருந்துகளும் இரட்டை மாடி கொண்ட டபுள்டக்கர் பேருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் பேட்டரியில் இயங்க கூடிய பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Des : The Transport Minister said that buses in Tamil Nadu will be introduced soon.
In Karur, Transport Minister Vikasabaskar examined the newly designed buses. He said that the buses were designed with modern amenities for the safety of passengers in Tamil Nadu. New buses with sleeper beds in Tamil Nadu and double bungalow double buses are being prepared. The minister said that the buses that run on the battery will be introduced soon.