இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்- தமிழ்நாடு வெதர்மேன்- வீடியோ

2017-11-27 2,841

சென்னை உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில் வரும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதுடன் வரும் டிசம்பர் மாதம் அதி தீவிரமான காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது புயலாக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் ஒன் இந்தியாவிற்கு அளித்த பிரத்தேயக பேட்டியில் தெரிவித்துள்ளார்

வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென்தமிழக கடலோர மாட்டங்களில் காலை முதல் கனமழை பெய்துவருகிறது .தூத்துக்குடி ராமநாதபுரம் , கன்னியாகுமரி கடலூர் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் இரண்டு நாட்களுக்கு இந்த கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் .

சென்னையை பொறுத்தவரை பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்புகள் உள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார் . தற்போது உருவகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மறுதினம் அரபிக்கடலில் உள்நோக்கி சென்றுவிடும் என்றார்

மேலும் வரும் டிசம்பர் மாதம் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று நிச்சயம் உருவாகவாய்புகள் உள்ளதாகவும் அது அதி தீவிரம் அடைந்து புயல் சின்னமாக மாறுவதற்கான வாய்புகள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்

இப்புயல் உருவானால் ஆந்திரா அல்லது தமிழகத்தை தாக்கக்கூடிய வாய்புகள் உள்ளதகா தெரிகிறது என்றுள்ளார்

Des : Meteorologist Pradeep John said rainfall for two days in the southern districts of Tamil Nadu, including Chennai, would be a highly volatile atmospheric phenomenon in December and it could be a stormy change.

Videos similaires