ஒரேயொரு செல்ஃபியால் அனைவரையும் 'ஷட்அப்' பண்ண வச்ச ஆரவ்- வீடியோ

2017-11-27 4,573

ஆரவ் செய்த ஒரு காரியத்தால் அவரை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார் ஆரவ். பிக் பாஸ் டைட்டிலை வென்ற அவர் கையில் தற்போது 2 படங்கள் உள்ளன. இந்நிலையில் அவர் பனையூரில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளார்.
குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆரவ். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார் ஆரவ். அந்த குழந்தைகள் நம்மை போன்று ஆக உதவி செய்வோமாக என்றும் தெரிவித்துள்ளார். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் ஆரவ் எடுத்த செல்ஃபியை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை பாராட்டியுள்ளனர். நல்ல விஷயம் செய்திருக்கிறீர்கள் ஆரவ் என்று வாழ்த்தியுள்ளனர். எனக்கு வர வர கமெண்ட் பண்றதுக்கு வார்த்தை இல்லாம போகுது...நீங்க தான் காரணம் ப்ரோ... நீங்க அடிக்கடி என்ன ஷட்ஆப் பண்ண வச்சிறீங்க... உங்களின் ரசிகர்கள் என்பதில் பெருமை அடைகிறோம்...செல்ஃபி கேட்ட ஃபேன்ஸ்... சந்தோஷமா என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.


Bigg Boss title winner Aarav has visited Little hearts school for special kids in Panayur. He took a selfie with the kids and posted it on twitter. Netizens are appreciating Aarav for his kind gesture.