அமெரிக்காவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமி லெக் நெல் பீட்டர்ஸ் பட்டம் வென்று மகுடம் சூடினார். இரண்டாவது இடத்தை கொலம்பியா நாட்டு அழகியும், மூன்றாவது இடத்தை ஜமைக்கா நாட்டுப்பெண்ணும் தட்டிச்சென்றனர்.
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் உள்ள பிளானெட் ஹாலிவுட் ரிசார்ட் அண்ட் கேசினோ என்னுமிடத்தில் 66வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் 92 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு அறிவுத் திறன், நீச்சல் உடை, மாலை நேர உடை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு இறுதிப்போட்டிக்கு 10 அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிச்சுற்றில் தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 22 வயதான நெல் பீட்டர்ஸ் பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்று மகுடம் சூடினார். கடந்த ஆண்டு பட்டம் வென்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபஞ்ச அழகி ஐரீஸ், கிரீடத்தை சூட்டி விட்டார். ஆனந்த கண்ணீர் மல்க மகுடம் சூடிக்கொண்டார் நெல் பீட்டர்ஸ். மிஸ்யுனிவர்ஸ் பட்டம் வென்ற அழகிக்கு பரிசாக நியூயார்க் நகரில் அபார்ட்மென்ட் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமி லெக் நெல் பீட்டர்ஸ் பட்டம் வென்று மகுடம் சூடினார். இரண்டாவது இடத்தை கொலம்பியா நாட்டு அழகியும், மூன்றாவது இடத்தை ஜமைக்கா நாட்டுப்பெண்ணும் தட்டிச்சென்றனர்.
The woman representing South Africa has won has won the Miss Universe crown.Demi-Leigh Nel-Peters, who recently earned a business management degree, was crowned Sunday during the event that took place at The AXIS theater at Planet Hollywood casino-resort on the Las Vegas Strip.