வேலூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு ஆசிரியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் பேட்டியளித்த காட்சிகள்
அரக்கோணம் அருகே ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட எஸ்.பி. பகலவன் உத்தரவிட்டுள்ளார். பனப்பாக்கத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரேவதி,16, சங்கரி,16, தீபா,16, மனீஷா,16. இவர்கள் அனைவரும் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர். பள்ளியில் சரியாக படிக்காததால் பெற்றோரை அழைத்து வருமாறு தலைமை ஆசிரியை கூறியதால் அவர்கள் இந்த சோக முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.