ஒரு மாணவி மட்டும் கடைசி நிமிடத்தில் கிணற்றில் குதிக்காமல் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்கள்- வீடியோ

2017-11-25 2

அரக்கோணம் அருகே உள்ள பணப்பாக்கம் அரசுப்பள்ளியில் படித்து வந்த மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி ஆகியோர் நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். மாணவிகள் நான்கு பேர் கூட்டாக தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், மாணவிகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று பணப்பாக்கத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்துவருகிறது. பதற்றமான சூழ்நிலையால் அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் மரணத்திற்கான காரணம் குறித்த, முதற்கட்ட விசாரணையில் மாணவிகள் ஏன் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த பருவத் தேர்வுகளில் மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி உள்ளிட்ட சில 11ம் வகுப்பு மாணவிகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து வரச் சொல்லி திட்டி இருக்கிறார்கள்.

Videos similaires