கேரள முகவரியில் இறக்குமதி செய்தால் கூடுதலாக வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக, புதுச்சேரியில் போலியான முகவரியில் சொகுசு காரை பதிவு செய்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகை அமலாபால், நடிகர் பகத்பாசில் ஆகியோர் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடிகை அமலாபால் புதுச்சேரி உழவர்கரை (oulgaret) ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் காரை தனது பெயரில் பதிவு செய்தார். PY 05 D 500 என்ற பதிவு எண் கொண்ட ரூ.1.15 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு புதுச்சேரியில் 1.5 லட்சம் ரூபாய் வரிசெலுத்தியுள்ளார் அமலாபால்.
ஆனால், இதே காரை கேரளாவில் முறையாக இறக்குமதி செய்து பதிவு செய்தால், 23 லட்சம் வரி செலுத்தியிருக்கவேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் அமலாபாலின் கார் பதிவு செய்திருந்த முகவரி போலியானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட கேரள போலீசார், அமலாபாலின் கார் பதிவான முகவரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த முகவரில் வசித்துவந்தவர்கள் தங்களுக்கும் அமலாபாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர்.
Thiruvananthapuram Police registered case against actress Amalapaul and fazil in luxury ar registration ccase after preliminary investigation over.