சினிமா இணைதயாரிப்பாளர் ஒருவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவத்தால் தமிழ் சினிமா தற்போது ஆடிப்போய் இருக்கிறது.
ஏன் இந்த மரணம் ? யார் காரணம் ? குறிப்பிட்ட ஒருவர் மட்டும் தான் காரணமா? அவரது பிண்ணனி என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடினால் அது வளர்ந்துகொண்டே போகிறது. இதை எல்லாம் கேட்டால் சாதாரண மக்களுக்கு தலையே சுற்றிவிடும் அந்த அளவிற்கு கொட்டிக்கிடக்கிறது இந்த மரணத்திற்கு பின்னால் உள்ள விஷயங்கள்.மதுரையில் சின்னதாக வட்டிக்கடை நடத்திக்கொண்டு இருந்த பைனான்ஸியருக்கு, தோட்டத்தின் முக்கியப் புள்ளியிடம் இருந்து தென்மாவட்ட நடிகரும், அரசியல்வாதியுமான ஒருவருக்கு போன பணத்தில் கொக்கி போட்டதில் தான் இவ்வளவு பெரிய ஆள் ஆனாராம் நமது பைனான்ஸியர். இங்கு கொடுப்பதை விட சென்னையில் சினிமாகாரர்களுக்கு கடன் கொடுத்தால் நிறைய திரும்ப வரும் என்று சிலர் ஐடியா கொடுக்க சென்னை வந்து கடை போட்டாராம். கொஞ்சம் கொஞ்சமாக சினிமாகாரர்களின் நம்பிக்கைக்குரிய பைனான்ஸிரும் ஆகியும் இருக்கிறார்.
அப்படியும் சில இடங்களில் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்துகளும் நடந்து இருக்கின்றன. பிறரை விர குறைவான வட்டிக்கு சொன்ன நேரத்தில் கேட்ட பணம் கிடைப்பதால் சினிமாக்காரர்கள் இவரை மொய்த்து இருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு மணியான இயக்குநரின் அண்ணன் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து இறந்தபோதும் அடிபட்டது இதே பைனான்ஸியரின் பெயர் தான். அப்போது தோட்டத்து சின்ன அன்னையின் பெயரை சொல்லி தப்பித்தார். அதன் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சூரியன் மலர்ந்தபோதும், சின்னவரின் வாரிசோடு ஜோடி போட்டு சுற்றிக்கொண்டிருந்தார். அப்போதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
நாளுக்கு நாள் அந்த பைனான்ஸியரிடம் கடன் வாங்கும் சினிமா பிரபலங்களின் எண்ணிக்கையும், அதை திருப்பி வாங்க அவரது அடாவடியும் அதிகரித்துக்கொண்டே போனது. சமீபத்திய தற்கொலையில் தான் அவரது பெயர் வெளியே வந்து இருக்கிறது. அதுவும் அவர் எழுதிய கடிதத்தால், அதையும் வெளிவிடாமல் செய்யவும், போலீஸிடம் போகாமல் சமரசம் பேசவும் கடவுளான படத்துக்கு தேசிய விருது வாங்கிய இயக்குநர் ஒருவரால் பஞ்சாயத்து பேசப்பட்டது.
பஞ்சாயத்து எல்லாம் சரிவராது போலீஸிற்கு போகலாம் என்று அழைத்துச் சென்றது வீரனான தாடிக்கார இயக்குநர் தான். ஏற்கனவே லிங்கமான இயக்குநர், முக்கிய நடிகர் உள்ளிட்ட பலரும் இந்த பைனான்ஸியரால் மிகவும் கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறார்கள். இனியும் நாம் பொறுமையாக இருக்க முடியாது என்று சுப்பிரமணியபுர நடிகரை மனம் மாற்றி இருக்கிறார். இதனால் கோபமான அந்த தேசிய விருது இயக்குநர் கோபமாக அப்போதே மருத்துவமனையில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
The Shoking Reasons Behind the absconding of the Financier in Co Producer Suicid Case.