டியர் சச்சின்.. குட்டி ரசிகரின் கடிதம்.. நெகிழ்ந்து போன சச்சின்!- வீடியோ

2017-11-24 1

ஒரு குட்டி ரசிகரின் கடிதத்திற்கு டிவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுள், கிரிக்கெட் ஜாம்பவான் என்று போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கருக்கு. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவருக்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் சச்சினுக்கு குட்டி ரசிகர் லெட்டர் ஒன்றை தன் கைப்பட எழுதியுள்ளார். டியர் சச்சின் சார்.. என ஆரம்பித்து தன்னை ஜான்ஹவி சமீப் லாட் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த சிறுவன் தான் சச்சினின் மிகப்பெரிய ஃபேன் என்று கூறியுள்ளான்.

தான் 7ஆம் வகுப்பு படிப்பதாகவும் தனக்கு 12 வயதாவதாகவும் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளான் சிறுவன். தான் ஒரு மகாராஷ்டிரன் என்றும் உங்களை (சச்சின்) பற்றி அதிகம் கேள்வி பட்டிருக்கிறேன் என்றும் அந்த சிறுவன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளான்.

மேலும் சச்சினை அதிகமாக டிவி, நியூஸ்பேப்பர், போஸ்டர்ஸ், கூகுள் யூட்யூப்பில் பார்த்துள்ளதாகவும் ஜான்ஹவி தெரிவித்துள்ளான். நீங்கள் மிக பிரபலமானவர் என எனக்கு தெரியும்.

A 12 years old boy named Janhavi has written a letter to cricketer Sachin. Sachin enjoyed this letter and shared in tweeter.

Videos similaires