குஜராத்தில் மோடியின் இறுதி ஆயுதம் கண்ணீர்- வீடியோ

2017-11-24 3,504

குஜராத் தேர்தலில் பா.ஜ.க.,வை வெற்றி பெற வைக்க இனி மோடியிடம் கைவசம் இருப்பது கண்ணீர் தான் என்று காங்கிரஸிற்கு ஆதரவளித்து வரும் ஓ.பி.சி பிரிவினர் கூட்டமைப்புத் தலைவர் அல்பேஷ் தாகூர் தெரிவித்து உள்ளார்.
குஜராத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க ஐந்து கட்டமாக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. காங்கிரஸ் இதுவரை இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை மட்டுமே அறிவித்து உள்ளது. பல்வேறு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதால் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 ஆண்டுகளாக அங்கு ஆட்சி செய்து வரும் பா.ஜ.க.,வை தோற்கடிக்க காங்கிரஸ் முயற்சி செய்துவருகிறது. ஆளும் பா.ஜ.க.,வின் மீது அதிருப்தியில் இருக்கும் மக்களின் தலைவர்களைத் திரட்டி பா.ஜ.க.,வை எதிர்க்க காங்கிரஸ் வியூகம் வகுத்து இருக்கிறது.இதனடிப்படையில் ஹர்திக் பட்டேல் தலைமையிலான பட்டேல் இன போராட்டக்குழுவிடம் இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக வாக்குறுதி அளித்து ஆதரவைப் பெற்று இருக்கிறது காங்கிரஸ். அதுபோல தலித் இன மக்களுக்காகப் போராடி வரும் ஜிக்னேஷ் மேவானியுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் கூட்டமைப்பின் தலைவரான அல்பேஷ் தாகூரும் காங்கிரஸிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து உள்ளார்.

Modi's cry is the only attempt left for BJP in Gujarat says OBC Leader Alpesh Thakore. He is now Supporting Congress to throw away BJP from the State.

Free Traffic Exchange

Videos similaires