ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சேர்ந்து செய்த கொலை.. டெல்லியில் மீண்டும் பயங்கரம்- வீடியோ

2017-11-24 3,847

டெல்லியை சேர்ந்த சில பள்ளி மாணவர்கள் ஓடும் பேருந்தில் ஒருவரை கொலை செய்து இருக்கிறார்கள். அந்த பள்ளி மாணவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் இந்த கொலை ஒரு சிறிய செல்போன் சார்ந்த பிரச்சனை காரணமாக ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். அந்த மாணவர்கள் அந்த நபரை கொலை செய்தது மட்டுமில்லாமல் அங்கு இருந்த நபர்களையும் அமைதியாக இருக்கும் படி மிரட்டி இருக்கின்றனர். தற்போது டெல்லியில் உள்ள பள்ளி முழுக்க இந்த மாணவர்களை தேடி வருகின்றனர். மேலும் அவர்களது வரைபடத்தை வெளியிடும் முடிவிலும் உள்ளனர்.

டெல்லியில் முக்கிய இடங்களில் ஒன்றான 'அஷாரம் சவுக்' என்ற பகுதியில் செல்லும் பேருந்து ஒன்றில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த பேருந்தில் இருந்த நபர் ஒருவர் தன்னுடைய செல்போனை காணவில்லை என்று கூறி கூச்சலிட்டு இருக்கிறார். மேலும் அவர் அங்கு இருந்த அனைத்து நபர்களிடமும் தனது செல்போனை தேடி இருக்கிறார்.

A group of school students slit a man's throat in a moving bus in Delhi following an argument reportedly over a stolen cellphone.

Videos similaires