எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை வழங்கியதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதிமுக இரண்டாக பிளவுபட்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது இரட்டை இலை சின்னம் கோரி இரண்டு அணிகளும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன. இதனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. இந்நிலையில் இரு அணிகளும் மீண்டும் ஒன்றினைந்தது. இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையம் பல மாதங்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் அணிக்கு வழங்குவதாக அறிவித்தது. இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
Des : Ettapadi Palaniasamy and O Panneer Selvam were awarded by the Election Commission with a double leaf symbol, the AIADMK activists were excited and delighted with the publication of sweets and burst crackers