நாசர், விஷாலை தேர்தலில் எதிர்க்க தயாராகும் எஸ்.வி.சேகர், ராதிகா? எக்ஸ்க்ளுசிவ்- வீடியோ

2017-11-24 1,948

ஒரு மாநிலத்தில் சினிமா நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் உலக அளவில் பரபரப்பான மிராக்கிள் 2015 இல் தான் தமிழ்நாட்டில் நடந்தது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மாபெரும் சக்திகளாக விளங்கிய தலைவர் சரத்குமார், பொதுசெயலாளர் ராதாரவி இருவரையும் வீழ்த்தி அரியணையில் அமர்ந்தனர் நாசர், விஷால், கார்த்தி அணியினர். ஒரு பொதுத்தேர்தலுக்கு உண்டான பரபரப்புடன் நடந்து முடிந்த தேர்தல் மீண்டும் 2018ம் ஆண்டு செப்டம்பரில் நடக்கவிருக்கிறது. இன்னும் செய்து முடிக்க வேண்டிய பணிகள் இருப்பதால் மீண்டும் போட்டியிடுவோம் என்று பாண்டவர் அணி அறிவித்திருக்கிறது. சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீண்டும் போட்டியிடுவது சந்தேகம் தான் என்ற நிலையில் இப்போது ஒரு புது செய்தி வருகிறது. தலைவர் பதவிக்கு எஸ்.வி.சேகரும், பொதுச் செயலாளர் பதவிக்கு ராதிகாவும் போட்டியிடப்போவதாகவும் அவர்களை ஒரே அணியாக்க முயற்சிகள் நடப்பதாகவும் சொல்கிறார்கள். கடந்த தேர்தலில் விஷால் அணிக்கு உதவி செய்த எஸ்வி.சேகர் அதன் பின்னர் விஷால் அணியை தட்டிக் கேட்க தொடங்கி இப்போது அவர்களுக்கே எதிரியாக மாறி இருக்கிறார். ராதிகா சரத்குமார் அணியின் ஆக்டிவ் கொ.ப.செ. வாக இருந்தார். இருவரும் போட்டியிடுவது விஷால் அணிக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்கிறார்கள்.

Sources says SV Shekar and Radhika Sarathkumar are planning to contest in the artist union election 2018 against Vishal team.

Videos similaires