தொடர்ந்து கிரிக்கெட போட்டிகளில் விளையாடி வருவதால் கஷ்டமாக இருப்பதாக இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் எதற்குமே நேரம் கிடைப்பது இல்லை என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என வரிசையாக கோஹ்லி ஓய்வு இன்றி விளையாடிக்கொண்டு இருப்பதால் அவர் இப்படி கூறி இருப்பதாக தெரிகிறது. மேலும் இன்னும் தொடர்ச்சியாக பல போட்டிகள் வரிசைகட்டி நிற்கிறது.
இந்த நிலையில் அவர் தனது போட்டியில் பிசிசிஐ அமைப்பை சாடி கோபமாக பேசி இருக்கிறார். மேலும் சில நாட்களுக்கு முன்பு இவர் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வு கேட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு அடுத்தபடியாக இரண்டு நாள் இடைவெளியில் தென்னாப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாட செல்ல இருக்கின்றது.
Kohli is playing continuously for last three months. BCCI hasn't allowed his to take rest before South Africa series. So Kholi talks about BCCI rotation policy.