பார்வைச் சவால் கொண்ட இளைஞர் ஒருவர் நடிகர் அஜித்தை பற்றி உருக்கமாகப் பேசியிருக்கிறார். இந்த வீடியோ டாகுமெண்டரி படம் ஒன்றிற்காக அஜித் ரசிகர்களால் எடுக்கப்பட்டிருக்கிறது.
அஜித்தின் ஆரம்பகாலம் முதல் இப்போதுள்ள நிலை வரை அவரது அருமை பெருமைகளை ஒன்றிரண்டு நிமிடங்களில் பேசியிருக்கிறார் அந்த இளைஞர். அஜித்தை தனக்கு ஏன் பிடிக்கும் என்பதற்கான காரணங்களை அவர் இந்த வீடியோ மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவரின் படங்கள் வெளியாகும்போது மிகப்பெரிய ஓபனிங் இருக்கும். அஜித்தின் ஸ்டைலுக்காகவே பலர் அவரது ரசிகர்களாக இருப்பார்கள்.
அஜித்தை பாற்றி பார்வைச்சவால் கொண்ட இளைஞர் பேசிய இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். ரசிகர் மன்றங்களைக் கலைத்த அஜித், பலருக்கும் இதுபோல் உதவி செய்வதாக அவ்வப்போது செய்திகள் வருமென்பதும் குறிப்பிடத்தக்கது.
A video of a Visually challenged person is supporting actor Ajith is going viral. This video was taken by ajith fans for a documentary film.