பல ஆயிரம் கோடியில் சென்னையில் 3 உயர்மட்ட சாலை..எங்கே அமைகிறது தெரியுமா?- வீடியோ

2017-11-24 34,587

சென்னையில் தாம்பரம்- செங்கல்பட்டு உட்பட 3 உயர்மட்ட சாலைகள் அமைக்கப் படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். சாலை திட்டங்களுக்காக தமிழகத்திற்கு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் மந்திரி நிதின் கட்கரி சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டம் முடிந்ததும் நிதின் கட்கரி நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.22 கோடி செலவில் தாம்பரம்-வண்டலூர் நடுவேயான சாலை மேம்படுத்தப்பட உள்ளது.

அதேபோல, ரூ.50 கோடி செலவில் வண்டலூர்- கூடுவாஞ்சேரி இடையே சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளது. சென்னையில் 3 உயர்மட்ட சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.2,250 கோடி செலவில் தாம்பரம்- செங்கல்பட்டு, ரூ.1,500 கோடியில் பூந்தமல்லி-மதுரவாயல், ரூ.1,000 கோடியில் சென்னை புறநகர்-நங்கநல்லூர் இடையே உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.

Tamil Nadu gets crores worth infrastructure projects from Centre three elevated corridors for Chennai and bus ports at Madurai, Coimbatore and Salem that will be on par with airports

Videos similaires