நடிகை சகாரிகாவை மணந்த கிரிக்கெட் வீரர் ஜகீர் கான்: பிரபலங்கள் வாழ்த்து

2017-11-23 9,638

பாலிவுட் நடிகை சகாரிகா கட்கே தனது காதலரான கிரிக்கெட் வீரர் ஜகீர் கானை திருமணம் செய்து கொண்டார்.
கிரிக்கெட் வீரர் ஒருவரும், பாலிவுட் நடிகையும் காதலித்து திருமணம் செய்வது புதிது அல்ல. அந்த பட்டியலில் தற்போது சேர்ந்திருக்கிறார்கள் ஜகீர் கானும், சகாரிகா கட்கேவும்.
கிரிக்கெட் வீரர் ஜகீர் கான் தனது காதலியான நடிகை சகாரிகா கட்கேவை இன்று திருமணம் செய்து கொண்டார். ஜகீர், சகாரிகாவின் திருமணம் மும்பையில் உள்ள தாஜ் மகால் பேலஸில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். ஜகீர் கான், சகாரிகாவின் திருமண பத்திரிகை கூட சிம்பிளாக அடித்திருந்தனர். ஜகீர், சகாரிகாவுக்கு கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சக்தே இந்தியா படத்தில் சகாரிகாவுடன் சேர்ந்து நடித்தவர் வித்யா மல்வதே. அவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜகீர், சகாரிகாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சக்தே இந்தியா படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்த சகாரிகா கிரிக்கெட் வீரரை காதலிப்பார். தற்போது நிஜத்திலும் அப்படி நடந்துவிட்டது என்கிறார் சகாரிகா.


Zaheer Khan and Sagarika Ghatge got married in a private affair at the Taj Mahal Palace and Tower in Mumbai. Even the wedding card was out a few days ago in all plain white with a text in black and golden colour.

Videos similaires