வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு..பின்னர் புலம்புவது ஏன்?- எஸ்.வி.சேகர்- வீடியோ

2017-11-23 1

கடன் வாங்குவதற்கு முன்பு தெரிந்தே வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு கடன் வாங்கிவிட்டு பின்னர் புலம்புவது ஏன் என்று எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் மதுரையில் உள்ள அன்புச்செழியனிடம் கடன் பெற்றதாகவும் அவர் அசோக்குமாரின் குடும்பப் பெண்களையும் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அசோக்குமார், அபிராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து திரபைத்துறையிநர் ஒன்று சேர்ந்து கந்து வட்டியால் தயாரிப்பாளர்களின் பாதிப்பு குறித்து கருத்து கூறிவருகின்றனர்.

சினிமாவில் கந்து வட்டி கும்பலுக்கு ஒழித்து கட்டுவோம் என்று நடிகர் விஷால் சபதம் ஏற்றுள்ளார். இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து அவர் மிகவும் ஆக்ரோஷமாக கருத்துகளை தெரிவித்தார். இதை சுட்டிக் காட்டி எஸ்.வி.சேகர் தனது கருத்துகளை தொடர் டுவீட்டுகளாக பதிவு செய்துள்ளார்.

Actor S.Ve.Shekher says that before borrowing debts, you people are signing in white paper as you know, then why are now lamenting.

Videos similaires