அண்ணன், 'அன்பு' அண்ணன் என உருகிய விஷால்: வைரலான வீடியோ

2017-11-23 12,742

அன்புச்செழியனை அண்ணன் அண்ணன் என்று பாசமாக கூறிய விஷால் எப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கந்துவட்டிக்கு பைனான்ஸ் கொடுத்து அன்புச்செழியன் செய்த அடாவடியால் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். அன்பு மீது போலீசில் புகார் கொடுக்காமல் விஷயத்தை அமுக்கவும் முயற்சி நடந்துள்ளது. செல்வா்ககு மிக்க அன்பு மீது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நடவடிக்கை எடுப்பாரா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

விஷால் தான் தயாரிப்பாளர் ஆனதற்கு அன்பு அண்ணன் பெரிதும் உதவியதாக பெருமையாக பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அன்புச்செழியனை புகழ்ந்து பேசிய வீடியோவும் தற்போது வைரலாகியுள்ளது. விஷாலும், ஞானவேல்ராஜாவும் எப்படி அன்பு மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அசோக் குமார் தற்கொலைக்கு கண்டனம் எல்லாம் தெரிவித்த விஷால் அன்புச்செழியனின் பெயரை கூட தைரியமாக தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் எப்படி நடவடிக்கை எடுப்பார் என்று அனைவரின் கண்களும் அவர் மீது உள்ளது.

All eyes are on Film producers council president Vishal as he is expected to take action against financier Anbu Chezhiyan who is the reason for producer Ashok Kumar's suicide. In the mean while, a video of Vishal praising Anbu has gone viral on social media

Videos similaires