நடிகையை பலாத்காரம் செய்து வீடியோ எடுக்க பல்சர் சுனிக்கு ரூ.1.5 கோடி கொடுத்த திலீப்- வீடியோ

2017-11-23 13,458

பிரபல நடிகையை மானபங்கப்படுத்த மலையாள நடிகர் திலீப் பல்சர் சுனிக்கு ரூ. 1.5 கோடி கொடுத்ததாக சிறப்பு விசாரணை குழு அளித்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி பல திடுக்கிடும் தகவல்களை விசாரணையில் தெரிவித்துள்ளார். நடிகையின் வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு அளித்துள்ள துணை குற்றப்பத்திரிகை பிரபல ஆங்கில நாளிதழுக்கு கிடைத்துள்ளது. நடிகையை அசிங்கப்படுத்த திலீப் பல்சர் சுனிக்கு ரூ. 1.5 கோடி கொடுத்ததாக அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகையை கடத்தி அசிங்கப்படுத்திய வழக்கில் மேடம் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சுனி தெரிவித்தார். பின்னர் அந்த மேடம் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கும் இருந்த உறவை கண்டுபிடித்து அவரின் மனைவியான மஞ்சு வாரியரிடம் அந்த பிரபல நடிகை தெரிவித்தார். இதனால் திலீப் அந்த நடிகையை பழிவாங்க நினைத்தார்.


Videos similaires