கோல்கத்தாவில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் ஒரு சாதனையை, விராட் கோஹ்லி முறியடித்தார். மூன்று டெஸ்ட்கள், மூன்று ஒருதினப் போட்டிகள், மூன்று டி–20 போட்டிகளில் விளையாட, இலங்கை கிரிக்கெட் அணி வந்துள்ளது. தற்போது டெஸ்ட் போட்டித் தொடர் நடந்து வருகிறது.
பெருமை, கேப்டன் கூல், மகேந்திர சிங் டோணிக்கு உள்ளது. அவர், 60 போட்டிகளில், 27 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தொடரை 3–0 என்ற கணக்கில் வென்றால், கங்குலியின் சாதனையை கோஹ்லி முறியடிக்க முடியும். கோஹ்லி கேப்டனாக இதுவரை 29 போட்டிகளில், 19ல் வென்றுள்ளார். கோல்கத்தா போட்டி டிராவில் முடிந்ததால், அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றால், கங்குலியின் சாதனையை கோஹ்லி சமன் செய்ய முடியும்.
Indian captain Virat Kholi surpasses Ganguly