தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம்- வீடியோ

2017-11-22 1

ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து பல இடங்களில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகள் முன் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர். ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கடந்த 17ஆம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை காரணமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்தும், ரேஷன் பொருட்களை முறையாக வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சேலம் செவ்வாய்பேட்டையில் தொ.மு.ச. பேரவைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடை மருதூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நெல்லை, கடலூர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

Thousands of DMK members staged protests in front of ration shops across Tamil Nadu The party was protesting increasing the sugar at PDS shops.

Videos similaires