போயஸ் கார்டானின் வாசலில் சாபம் விட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ- வீடியோ

2017-11-22 1,480

மறைந்த ஜெயலலிதாவிற்கு திதி கொடுக்க போயஸ்கார்டனுக்குள் ஐயர்களை அனுமதிக்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு அநியாயம் செய்வதாக அதிமுக அம்மா அணியின் தணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியுள்ளார். ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு இன்று நட்சத்திர திதி என்பதால் போயஸ் கார்டனுக்குள் பூஜை செய்ய ஐயர்கள் சென்றுள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஐயங்காரான ஜெயலலிதாவுக்கு ஆண்டு சிரார்த்தம் (திதி) அனுசரிக்கும் வரை மாதாமாதம் ஊனமாசியம் என்ற சடங்குகள் செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டியே இன்று ஐயர்கள் பூஜை நடத்த போயஸ் கார்டனுக்கு சென்றுள்ளனர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டன் பகுதியில் திரண்டனர். ஐயர்களை பூஜை செய்ய அனுமதிக்குமாறு காவல்துறையினருடன் வெற்றிவேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அப்போதும் போலீஸ் திட்டவட்டமாக மறுத்துதிவட்டது.

TTV Dinakaran supporters accuses CM Palanisamy government for not allowing purohithars inside Poes garden for doing Pooja for Jayalalitha

Videos similaires