பேரறிவாளனை விடுவிக்கக் கூடாது... அதிமுக எம்.பி. திடீர் போர்க்கொடி- வீடியோ

2017-11-22 1

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவரான பேரறிவாளனை விடுவிக்கக் கூடாது என்று அதிமுக எம்.பி.யும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். கடந்த 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு சென்னை ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜனும், முன்னாள் நீதிபதி தாமஸும் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். முன்னாள் நீதிபதி தாமஸ் கூறுகையில், பேரறிவாளனை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுவிக்க பரிந்துரைக்க வேண்டும் என்று கடிதமும் எழுதியுள்ளார்.

இதேபோல் ஆயுள் தண்டனைக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்ற கருத்தை எதிர்த்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் ஒரு கருத்தை தெரிவித்துள்ளா

ADMK MP S.R.Balasubramaniyan opposes to release Rajiv Gandhi convict Perarivalan. He also concerns over Congress party for keeping silent over his release.

Videos similaires