பாரதி போல் தனது ப்ரொபைல் மாற்றிய கமல்- வீடியோ

2017-11-22 12

முண்டாசு கட்டிய பாரதி போல் தனது ப்ரொபைல் படத்தை சித்தரித்து நடிகர் கமல்ஹாசன் மாற்றியதை அடுத்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது குறித்து விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. ஊழலுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் ஏராளமான கருத்துகளை பதிவு செய்து வருகிறார். இதனால் ஆட்சியாளர்களும் தங்கள் பங்கிற்கு உரிய பதில்களை கொடுத்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வந்தது. இதை தடுக்க அரசு சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. ஆனால் அதை குடித்தால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்று யாரோ கிளப்பி விட, தனது ரசிகர்கள் நிலவேம்பு குடிநீர் விநியோகிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கமல் கேட்டுக் கொண்டார். அரசை இழிவுப்படுத்தும் விதமாக கருத்து பதிந்த கமல் மீது வழக்கு தொடர வேண்டும் என்றனர். நிதீமன்றத்தின் உத்தரவுபடி கமல் மீது வழக்குப் பதிவு செய்ய எந்த வித முகாந்திரமும் இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

Why Kamal hassan changes his profile picture as Bharathi. There was a big discussion in social medias.

Videos similaires