தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் எனில் தன்னுடன் உறவில் ஈடுபட வேண்டும், தனது கவர்ச்சி படங்களை பார்க்க வேண்டும் என்று மாணவர்களை நிர்பந்தப்படுத்திய கொலம்பியா நாட்டு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொலம்பியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யொகாஸ்டா என்ற அந்த ஆசிரியை, கொலம்பியா நாட்டின் 2வது பெரிய நகரான மெடலினிலுள்ள பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வந்தார். அந்த பள்ளியில் படிக்கும் 16,17வயது மாணவர்களுக்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைப்பார் யொகாஸ்டா. அந்த படங்களை பார்ப்பதோடு மட்டுமல்லாது தன்னுடைய ஆசைக்கும் இணங்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வந்துள்ளார் ஆசிரியை.
நீண்ட நாட்களாக இந்த விசயம் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. அதிக மதிப்பெண் வேண்டுமென்றால் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்று பல மாணவர்களை வற்புறுத்தியுள்ளார் யொகாஸ்டா.
வாட்ஸ் அப் மூலம் கவர்ச்சி படங்களை அனுப்பியதோடு மாணவர்களை சிறப்பு வகுப்பு என்று கூறி வீட்டுக்கு அழைத்து பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஆசிரியை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை இதுபோல் 40 மாணவர்களிடம் தவறாக நடந்துள்ளார் ஆசிரியை. இந்த நிலையில் ஒரு மாணவனின் செல்போனில் ஆசிரியையின் ஆபாசப்படங்களைப் பார்த்த தந்தை ஒருவர் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து உடனடியாக ஆசிரியை மீது புகார் அளித்தார்.
A Columbian teacher lured boy students for physical relationshp with her and has been sentened to 40 year by the court.