மைத்ரேயன் கூறிய மனம் எது என்று புரியவில்லை - ஜெயக்குமார்- வீடியோ

2017-11-21 1,099

மைத்ரேயன் கூறிய மனம் எது என்று புரியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலை கண்டு அதிமுகவுக்கு அச்சமில்லை என்று கூறினார். எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் யார் என்பதை கட்சி ஆட்சி மன்ற குழு முடிவு செய்யும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மைத்ரேயனின் ட்விட்டர் பதிவு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று மைத்ரேயன் பதிவிட்ட கருத்து பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று கூறினார். அவர் கூறிய மனம் புரியவில்லை என்றும், பொது வெளியில் மைத்ரேயன் இதுபோன்று கருத்து கூறக்கூடாது என்றும் தெரிவித்தார். எதுவென்றாலும் கட்சிக்குள் பேசி தீர்க்கலாம் என்றும் கூறினார்.



TN Minister Jayakumar has said that he is not getting clear what senior leader Maitreyan said about the party unity.

Videos similaires