போயஸ் கார்டன் சோதனையில் கிடைத்தது என்ன?... மர்மங்கள் உடைத்த வருமான வரித்துறை!- வீடியோ

2017-11-21 7,885

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடந்த நள்ளிரவு சோதனையின் போது என்னென்ன பொருட்கள் கிடைத்தன, எந்தந்த அறைகளில் சோதனை நடந்தது உள்ளிட்டவை குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த 17ம் தேதி மாலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்திற்குள் திடீரென வருமான வரித்துறையினர் நுழைந்தனர். இரவு 9 மணியளவில் இந்தத் தகவல்கள் மீடியாக்களில் கசிய போயஸ் கார்டன் ஏரியாவில் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளரவு 1.45 மணி வரை நீடித்த இந்த சோதனையால் அந்தப் பகுதியில் தொண்டர்கள் குவிந்தனர்.

ஒரு புறம் வருமான வரி சோதனை நடந்து கொண்டிருக்க மற்றொரு புறம் நள்ளிரவு போராட்டம், கைது என்று போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் நடந்த சோதனை குறித்து பலரும் சர்ச்சையான கேள்விகளை எழுப்பிய நிலையில், வருமான வரித்துறை அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

Income tax deparment clears that what are all captured from Poes garden Veda Nilayam, and where were the searches conducted and what is the current situation of siezed documents.

Videos similaires